

வரும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு மாற்று அரசை அமைப்பது குறித்து பல்வேறு பிராந்திய கட்சிகளுடன் பேசி வருகிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
இதுகுறித்து அவர் புவனேஸ் வரத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், “உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், தமிழ்நாட்டில் அஇஅதிமுக, கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதா தளம், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் என்ற பல்வேறு கட்சிகளுடன் இடதுசாரிக் கட்சிகள் பேசி வருகின்றன.
வரும் தேர்தலுக்குப் பிறகு இந்தக் கட்சிகள் ஒன்று சேரும் வாய்ப்புள்ளது” என்றார் காரத்.