

தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின்போது 5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 2 பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் பேசியது: இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்களையும் மிக பிரம்மாண்டாமான முறையில் நடத்த தேவஸ்தானம் முடிவு செய் துள்ளது. ஒவ்வொரு பிரம் மோற்சவத்துக்கும் 5,000 போலீஸார் மூலம் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது என்றார்.