காதலர் தினத்தில் காதலியுடன் சுற்றிய நபர் மனைவியிடம் நேரடியாக வகையாகச் சிக்கினார்

காதலர் தினத்தில் காதலியுடன் சுற்றிய நபர் மனைவியிடம் நேரடியாக வகையாகச் சிக்கினார்
Updated on
1 min read

பிஹாரில் காதலர் தினத்தை காதலியுடன் கொண்டாடிய தனது கணவரை அவரது மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் நடந்தேறியது.

தன் கணவரை இன்னொரு பெண்ணுடன் பார்த்ததால் கோபமடைந்த மனைவி சாலையிலேயே அவருடன் சண்டையிட்டார். பெய்லி சாலையில் தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் செல்வதைப் பார்த்த மனைவி பின்னாலேயே சென்று கையும் களவுமாக கணவரையும் அவரது காதலியையும் பிடித்தார்.

அதன் பிறகு கடும் வசைகளுடன் இருவரும் சாலையிலேயே சண்டையிட்டுக் கொண்டதையடுத்து போலீஸ் தலையீடு ஏற்பட்டது. இதனையடுத்து தனக்கும் இவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது என்றும் 2 குழந்தைகள் இருப்பதாகவும் மனைவி புகார் செய்தார்.

இந்தக் காதல் விவகாரத்தினால் தான் அவர் தன்னுடனும் குழந்தைகளுடன் சரிவரப் பழகுவதில்லை என்பதை தான் இப்போதுதான் புரிந்து கொண்டதாகவும் போலீஸ் நிலையத்தில் மனைவி புலம்பியுள்ளார்.

கணவரிடம் விசாரணை நடத்திய போலீசார், இன்று காதலர் தினம் என்பதால் தனது காதலியை வெளியே அழைத்துச் சென்றேன் என்று கூறினார். இந்த விவகாரம் தீராத நிலையில், மூன்று பேரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கணவர் - மனைவி இருவரும் சமாதானப் போக்கிற்கு வரவில்லை என்றால், மனைவியின் புகாரின் அடிப்படையில் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

நடு ரோட்டில் இந்தச் சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பலரும் சம்பவத்தை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in