Published : 14 Feb 2020 04:00 PM
Last Updated : 14 Feb 2020 04:00 PM

டெல்லி தேர்தலில் பாஜக தோல்வி ஏன்? - மூத்த தலைவர்கள் ஆலோசனை

டெல்லி தேர்தல் தோல்வி குறித்து பாஜக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக 8 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை.

டெல்லி மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் வரும் 16-ம் தேதி பதவி ஏற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நிகழ்ச்சிக்கு வருமாறு டெல்லி மக்களுக்கு முதல்வர் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தநிலையில் டெல்லி தேர்தல் தோல்வி குறித்து பாஜக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, கட்சியின் பொதுச்செயலாளர்கள் அனில் ஜெயின், அருண் சிங் மற்றும் டெல்லி மாநில பாஜக பொதுச்செயலாளர் சித்தார்த்தன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பாஜக தோல்விக்கு ஆம் ஆத்மி கட்சி அறிவித்த இலவச திட்டங்கள், குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து ஷாகின் பாக் போராட்டம் ஆகியவற்றை கட்சி சரியாக கையாளவில்லை என்ற கருத்துகள் முன் வைக்கப்பட்டன.

முன்னதாக டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பொதுச்செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து டெல்லி தேர்தல் தோல்வி குறித்து ஆலோசித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x