

இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
வங்கக் கடலோரங்களில் அமைந்துள்ள இந்தியா, மியான்மர், தாய்லாந்து, வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான் ஆகிய 7 நாடுகளின் கூட்டமைப்பான ‘பிம்ஸ்டெக்' சார்பில், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு தொடர் பான இரண்டு நாள் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்தக் கருத்தரங்கினை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தீவிரவாதத்துக்கு அடுத்தபடி யாக, உலக நாடுகள் அனைத் துக்கும் போதைப்பொருள் விவ காரம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. போதைப் பொருட்கள் விற்பனையால் கிடைக் கப்பெறும் பணமானது, தீவிர வாத அமைப்புகளுக்கு வழங் கப்பட்டு வருகிறது. அதுமட்டு மின்றி, தேசவிரோத செயல் களுக்கும் இந்த பணம் உதவிகர மாக உள்ளது.
எனவே, தீவிரவாதத்தை ஒழிக்க உறுதியேற்றுள்ள நாடு கள் அனைத்தும், போதைப் பொருள் கடத்தலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.இந்தியாவை பொறுத்தவரை, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் இன்னும் தீவிரமாக செயல்பட இந்தியா முடிவெடுத் துள்ளது.
இதனால், மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியா விலிருந்து மற்ற நாடுகளுக்கும் போதைப்பொருட்கள் கடத்தப்படு வது முற்றிலுமாக ஒழிக்கப்படும். அதேபோல், உலக அளவிலும் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க இந்தியா பெரும் பங்காற் றும். இவ்வாறு அமித் ஷா பேசினார். - பிடிஐ