Last Updated : 13 Feb, 2020 02:20 PM

 

Published : 13 Feb 2020 02:20 PM
Last Updated : 13 Feb 2020 02:20 PM

சிலிண்டர் விலை உயர்வு: டெல்லியில் மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மானியமில்லாத சிலிண்டர்கள் விலை உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுடெல்லியில் காங்கிரஸ் பெண்கள் பிரிவான மகிளா காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ மானியமில்லாத சிலிண்டரின் விலை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உயர்த்தப்படுவதாக இண்டேன் நிறுவனம் நேற்று அறிவித்தது.

நேற்று முதல் விலை உயர்த்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ள எரிவாயு சிலிண்டர், டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.144.5 உயர்த்தப்பட்டு ரூ.858.5 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல கொல்கத்தாவில் ரூ.149 உயர்த்தப்பட்டு ரூ.896 ஆகவும், மும்பையில் ரூ.145 உயர்த்தப்பட்டு ரூ.829.5 ஆகவும், சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆகவும் உள்ளது.

இதனை எதிர்த்து டெல்லியில் இந்திய காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மகிளா காங்கிரஸ் பிரிவைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ் மற்றும் அல்கா லம்பா உள்ளிட்ட அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

விலை உயர்வு விகிதம் பட்டியலிடப்பட்ட சிலிண்டர் படம் அச்சிடப்பட்ட அட்டையை ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் விலை உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

டெல்லியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துக்கு வெளியே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் படங்களை ஏஎன்ஐ ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x