இவிஎம் இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது: தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

இவிஎம் இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது: தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
Updated on
1 min read

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) மோசடி செய்ய முடியாது என்றும் மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாறும் கேள்விக்கே இடமில்லை என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார்.

டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சார்பில் நேற்று நடந்த கருத்தரங்கில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசியதாவது:

மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தலை நடத்தி வருகிறோம். வரும் நாட்களில் பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்கள், நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும்.

இவிஎம்-களில் மோசடி செய்யலாம் என்று பேசுவதை தவிர்க்க வேண்டும். கார், பேனா போன்று இவிஎம்மும் சில நேரங்களில் செயலிழக்கலாம். ஆனால், இவிஎம்-களில் மோசடி செய்ய முடியாது. 20 ஆண்டுகளாக தேர்தல்களில் இவிஎம்-களை பயன்படுத்தி வருகிறோம். மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாறும் கேள்விக்கே இடமில்லை. உச்ச நீதிமன்றம் உட்பட பல்வேறு நீதிமன்றங்கள் வாக்குப்பதிவுக்கு இவிஎம்-களை பயன்படுத்துவதை உறுதி செய்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in