Published : 13 Feb 2020 07:17 AM
Last Updated : 13 Feb 2020 07:17 AM

அன்பு செலுத்துங்கள்; வெறுப்பை காட்டாதீர்கள்: பாஜகவுக்கு ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் அறிவுரை

புதுடெல்லி

உலக கட்டிப்பிடி தினத்தையொட்டி அன்பு செலுத்துங்கள்; வெறுப்பை காட்டாதீர்கள் என்று பாஜகவுக்கு ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் அறிவுரை வழங்கி யுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்தார். ‘வெறுப்பு பிரச்சாரத்தைக் கைவிடுங்கள். அனைவர் மீதும் அன்பை வெளிப்படுத்துங்கள்’ என்று பேசிய அவர்,இறுதியாக பிரதமர் மோடியை கட்டியணைத்தார். ராகுல் காந்தியின் இந்த செயலை பலரும் பாராட்டினர்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் கட்டிப்பிடி தினம் நேற்று(பிப்ரவரி 12) கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்பக்கத்தில், மோடியை ராகுல் காந்தி கட்டியணைக்கும் வீடியோவைப் பதிவிட்டு கட்டிப்பிடி தினவாழ்த்துகளை கட்சி தெரிவித்துள்ளது. அந்த வீடியோ பதிவில், கட்டிப்பிடி தினத்தன்று பாஜகவுக்கு நாங்கள் ஒரு செய்தி வைத்துள்ளோம். நீங்கள் என்னை வெறுத்தாலும், அடித்தாலும் நான்உங்கள் மீது அன்பு செலுத்துவேன் என்று ராகுல் காந்தி பேசியவீடியோவையும் இணைத்துள்ளனர். அன்பை வெளிப்படுத்த திறனற்றவன் கோழை. அன்பை

வெளிப்படுத்துவது தைரியத்தின் தனிச்சிறப்பு என்ற மகாத்மா காந்தியின் விளக்கத்தையும் அதில் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது. இறுதியாக காங்கிரஸ் அன்பை நம்புகிறது. வெறுப்பை அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு ஒவ்வொரு ஆண்டும் இதே செய்தியை அனுப்புவோம். பாஜகவுக்கு இன்று எங்கள் செய்தி என்னவென்றால் கட்டிப்பிடியுங்கள், வெறுப்பைக் காட்டாதீர்கள் என்று அதில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டும் இதேபோன்ற செய்தியை ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x