சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி உட்பட மத நடைமுறை பற்றி விசாரணை: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி உட்பட மத நடைமுறை பற்றி விசாரணை: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு
Updated on
1 min read

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த 2018 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி 65 மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டன. கடந்த நவம்பர் 14-ம் தேதி இவற்றை விசாரித்த 5 நீதிபதி கள் அமர்வு, பெரிய அமர்வுக்கு வழக்கை மாற்றியது. இதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாமா, மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக் கப்படுவது, பார்சி பெண்கள் வேறு சமுதாய ஆண்களை திரு மணம் செய்யும்போது அவர் களின் வழிபாட்டு உரிமை மறுக் கப்படுவது உள்ளிட்டவை குறித் தும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதனிடையே, இவ்வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், “சபரிமலை வழக்கில் 9 நீதிபதிகள் அமர்வு நியமிக்கப் பட்டது தவறு. தேசிய முக்கியத் துவம் வாய்ந்த கேள்விகளை குடியரசுத் தலைவரால் மட்டுமே எழுப்ப முடியும். தலைமை நீதிபதிக்கு அந்த அதிகாரம் கிடையாது” என்று வாதிட்டார்.

இந்நிலையில் சபரிமலை வழக்கு நேற்று மீண்டும் விசா ரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கூறியதாவது:

சபரிமலை வழக்கின் மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை ஒன்பது நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டதில் எவ்வித தவறும் இல்லை. சபரிமலையில் பெண் களுக்கு அனுமதி உட்பட மத நடை முறைகள் குறித்து வரும் 17-ம் தேதி முதல் நாள்தோறும் வழக்கு விசா ரணை நடைபெறும். 7 கேள்வி களின் அடிப்படையில் விசாரணை நடத்தப் படும்.

1. மதச் சுதந்திரத்தின் நோக்கம், எல்லை என்ன?

2. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25, 26-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள மதச் சுதந்திரம் மற்றும் மத நம்பிக்கை இடையிலான தொடர்பு என்ன?

3. மதச் சுதந்திர உரிமைகள், அடிப்படை உரிமைகளுக்கு உட் பட்டதா?

4. மத நடைமுறைகளின் அறநெறிகள் என்ன?

5. மதச் சுதந்திரத்தில் நீதி மன்றம் தலையிட முடியுமா?

6. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 (2) (b)-ல் இந்துக் களின் ஒரு பிரிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளதன் அர்த்தம் என்ன?

7. ஒரு மதத்தின் நடைமுறை களை எதிர்த்து பிற மதத்தைச் சேர்ந்தவர் பொதுநல வழக்கு தொடர முடியுமா ஆகிய கேள்வி கள் அடிப்படையில் விசாரணை நடக்கும். இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் புதிய உத் தரவால் வழக்கு விசாரணையில் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in