Last Updated : 10 Feb, 2020 05:11 PM

 

Published : 10 Feb 2020 05:11 PM
Last Updated : 10 Feb 2020 05:11 PM

சிஏஏவுக்கு எதிரான போராட்டம்: லக்னோவில் 21 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு 

சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக பெண்கள் பலர் உட்பட 21 பேர் மீது உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லக்னோ ஹுசைனாபாத் கிளாக்டவரில் ‘லக்னோ சலோ’ என்ற பெயரில் போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறையில் ஈடுபட்டதாகவும், தூண்டும் விதமாக கோஷங்களை எழுப்பிய குற்றசாட்டுகள் அடிப்படையிலும் பெண்கள் பலர் உட்பட 21 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதியப்பெற்றதோடு, நூற்றுக்கணக்கான அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் வழக்குப் பாய்ந்துள்ளது.

ஜனவரி 17ம் தேதி முதல் இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

போலீஸ் கூறுவது என்ன?

இந்தப் போராட்டம் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன என்று குற்றம்சாட்டும் உ.பி. போலீஸ் கடந்த 4,5 நாட்களாக பிறரையும் போராட்டத்துக்கு அழைக்கும் விதமாக சமூகவலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று தன் முதல் தகவலறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் போராட்டக்காரர்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் வன்முறையைத் தூண்டும் விதமாக கோஷங்களை எழுப்பியபடி கிளாக்டவரை சுற்றி வரும்போது போலீசாரால் தடுக்கப்பட்டதாகவும் ஆனால் போலீசாரை தள்ளிவிட்டு போராட்டம் தொடர்ந்ததாகவும் வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வழக்கறிஞரும் குடிமை உரிமைகள் ஆர்வலருமான மொகமட் ஷோயப், காங்கிரஸ் கட்சித் தொண்டர் சதாஃப் ஜாபர், தலித் தலைவர் பி.சி.குரீல் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x