Last Updated : 10 Feb, 2020 04:14 PM

 

Published : 10 Feb 2020 04:14 PM
Last Updated : 10 Feb 2020 04:14 PM

கான்பூரில் சிஏஏவுக்கு எதிரான போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அகற்ற முயன்ற போலீஸாரால் பதற்றம்

கான்பூரில் சமன்கஞ்ச் பகுதியில் உள்ள மொகமட் அலி பூங்காவில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடக் குழுமியிருந்தவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. ஆனால் போராட்டத்தைக் கைவிடாத அவர்கள், போலீஸார் தடியடி நடத்தியதாகப் புகார் தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம் இவர்களுக்கு எதிரான வழ்க்குகளை வாபஸ் பெறுவதாக உத்தரவாதம் அளித்ததையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றதாக கூடுதல் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் விவேக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

போராட்டத்தை தேசிய கீதம் பாடி அவர்கள் நிறைவு செய்தாலும் பலர் அந்த இடத்திலேயே இருந்ததாக மேஜிஸ்ட்ரேட் தெரிவித்தார். அப்போதுதான் போலீஸார் ஞாயிறன்று இரவு கலைந்து செல்லும் படி கூறிஉள்ளனர்.

தடியடி எதுவும் நடத்தப்படவில்லை என்று வழக்கம் போல் மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது. வன்முறை நிகழக்கூடாது என்பதற்காகவே போலீஸார் நிறுத்தபப்ட்டதாக கான்பூர் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் பிரம்ம தியோ ராம் திவாரி தெரிவித்தார்.

பெண்களும் கலந்து கொண்ட இந்தப் போராட்டம் 21 நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் போலீஸார் வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றதாகவும் இதனால் பெண்கள் பார்க்கிற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் அமர்ந்ததாகவும் அங்கிருந்து வரும் மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீஸ் நடவடிக்கை செய்தி பரவியவுடன் மேலும் 500 போராட்டக்காரர்கள் குழுமியதாகத் தெரிகிறது. அப்பகுதியில் அதிக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x