Last Updated : 09 Feb, 2020 06:30 PM

 

Published : 09 Feb 2020 06:30 PM
Last Updated : 09 Feb 2020 06:30 PM

உருவாகிறது 'ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்' திரைப்படம்: டெல்லியில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் குறித்த வாழ்க்கை வரலாற்றின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.

இந்தியாவில், பத்மாவதி, தானாஜி, தி யூசங் வாரியர், மகாநடி, தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர், தாக்கரே போன்ற வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுவருகின்றன. தற்போது முன்னளாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றிய இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்கப்படும் செய்திகளும் வந்துகொண்டிருக்கிறது.

இவ்வரிசையில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுவருவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் திரு.பிரகாஷ் ஜாவடேகர் இன்று டெல்லியில் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியின் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட மத்திய அமைச்சர் அதில் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் சின்னமான மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றின் ஃபஸ்ர்ட் லுக் போஸ்டர் புதுடில்லியில் இன்று வெளியிடப்பட்டது. # Hollywood மற்றும் தெலுங்கு திரைப்படத்துறை இணைந்து தயாரிக்கும் இப்படம் 'APJ Abdul Kalam: The Missile Man' ('ஏபிஜே அப்துல் கலாம்: தி ஏவுகணை நாயகன்') இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தில் பிரபல தென்னிந்திய நடிகர் அலி முன்னாள் குடியரசுத் தலைவரின் பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இப்படத்தை ஜகதீஷ் தானேட்டி, சுவர்ணா பப்பு மற்றும் மார்டினி பிலிம்ஸ் நிறுவனத்தின் ஜானி மார்டின் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதுமட்டுமின்றி, 'சத்ரபதி சிவாஜி மகாராஜ்' மற்றும் 'முதல் இந்திய சுதந்திரப் போர்' குறித்த திரைப்படங்கள் உள்ளிட்ட 5 திரைப்படத் தயாரிப்புகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட மார்டினி பிலிம்ஸ் மற்றும் பிங்க் ஜாகுவார்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிற பேனர்களுடன் இணைந்து தயாரிக்க உள்ளன. இதற்காக அவர்கள் 1 பில்லியனுக்கும் அதிகமான முதலீடு செய்கிறார்கள்.

இவ்வாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x