டெல்லி தேர்தல்: 54.15% வாக்குகள் பதிவு

டெல்லி தேர்தல்: 54.15% வாக்குகள் பதிவு
Updated on
1 min read

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணிநேர நிலவரப்படி 54.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 54.15 சதவீத சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலில் 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.

இந்த தேர்தலில் முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். தலைநகர் என்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் டெல்லியில் வாக்கு உள்ளது. அவர்கள் அனைவரும் டெல்லி தேர்தலில் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் 2-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்குச் செய்த நலத்திட்டப்பணிகள், திட்டங்கள் போன்றவற்றைக் கூறி பிரச்சாரம் செய்தார்.

அதேசமயம், 1998-ம் ஆண்டுக்குப் பின் பாஜகவால் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஏறக்குறைய 22 ஆண்டுகளாகப் பிறகு இந்த முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதேபோல காங்கிரஸ் கட்சியும், 2014-ம் ஆண்டுக்குப் பின் டெல்லியைக் கைப்பற்ற முடியாமல் திணறி வருகிறது.

இதனால் இந்த முறை காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி இருந்தாலும், பாஜக, ஆம் ஆத்மி இடையேதான் தீவிரமான போட்டி இருந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in