Published : 08 Feb 2020 12:58 PM
Last Updated : 08 Feb 2020 12:58 PM

மோடி - ராஜபக்சே சந்திப்பு

படம் உதவி: ஏஎன்ஐ

இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சே ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் மஹிந்தா ராஜபக்சே.

அரசியல் பயணமாக வெள்ளிக்கிழமை இந்தியா வந்தடைந்த இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சேவுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை மஹிந்தா ராஜபக்சே சந்தித்தார்.

இருவரது சந்திப்பில் இந்தியா - இலங்கை இரு நாட்டு உறவின் முன்னேற்றம், பாதுகாப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ராஜபக்சே மற்றும் மோடியை இடையேயான சந்திப்பு நடைபெற்று வருகிறது. மோடியைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திக்கிறார்.

இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு ராஜபக்சே மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும்.

முன்னதாக, இலங்கை பிரதமரின் அலுவலகத்தின் அறிக்கையின்படி, ராஜபக்சேவின் இந்தியா - இலங்கை இடையே பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புகள், அரசியல், வர்த்தகம், வளர்ச்சி, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x