Published : 07 Feb 2020 07:25 PM
Last Updated : 07 Feb 2020 07:25 PM

டெல்லி தேர்தல் பிரச்சாரம்: கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் அவதூறாக பேசிய புகாரில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை 8-ம் தேதி தேர்தலும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. 2-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்குச் செய்த நலத்திட்டப்பணிகள், திட்டங்கள் போன்றவற்றைக் கூறி பிரச்சாரம் செய்தார்.

அதேசமயம், 1998-ம் ஆண்டுக்குப் பின் பாஜகவால் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஏறக்குறைய 22 ஆண்டுகளாகப் பிறகு இந்த முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதேபோல காங்கிரஸ் கட்சியும், 2014-ம் ஆண்டுக்குப் பின் டெல்லியைக் கைப்பற்ற முடியாமல் திணறி வருகிறது.

இதனால் இந்த முறை காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி இருந்தாலும், பாஜக, ஆம் ஆத்மி இடையேதான் தீவிரமான போட்டி இருந்து வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது மூன்று கட்சித் தலைவர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

கேஜ்ரிவால் இந்து - முஸ்லிம் பற்றி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக கேஜ்ரிவால் பேசியதாக கூறி பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம் இன்று கேஜ்ரிவாலுக்கு விளக்கம் கோாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தவறவிடாதீர்

'சட்டம் வாழ வாய்ப்பளித்தபோது தூக்கிலிடுவது பாவம்': நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட புதிய தேதி கோரிய திகார் சிறை மனு தள்ளுபடி

என்எல்சி சுரங்கப் பகுதியில் விஜய்யின் ‘மாஸ்டர்’ ஷூட்டிங் நடத்த எதிர்ப்பு: பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x