டெல்லியில் 50 தொகுதிக்கு மேல் பாஜக வெற்றி பெறும்: நடிகர் எஸ்.வி. சேகர் உறுதி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சீமாபுரி தில்சாத் கார்டன் பகுதியில் பாஜக சார்பில் நேற்று பிரச்சாரம் நடைபெற்றது. இதில் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் நடிகர் எஸ்.வி. சேகர்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சீமாபுரி தில்சாத் கார்டன் பகுதியில் பாஜக சார்பில் நேற்று பிரச்சாரம் நடைபெற்றது. இதில் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் நடிகர் எஸ்.வி. சேகர்.
Updated on
1 min read

டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அங்கு பாஜக சார்பில் நேற்று தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா, எஸ்.வி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரச்சாரத்துக்கு பிறகு அங்கிருந்த செய்தியாளர்களிடம் எஸ்.வி. சேகர் கூறியதாவது:

டெல்லியில் 27 லட்சத்துக்கும் மேலான தென்னிந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் தமிழர்கள் 10 லட்சம் பேர். அவர்கள் அனைவரும் இன்றைக்கும் ஏழைகளாகத்தான் உள்ளனர். கடந்த இரண்டு முறை கெஜ்ரிவால் வெறும் பெயரளவில் மட்டுமே ஆட்சி செய்திருக்கிறார். இலவசம் என்று அவர் அறிவித்த சலுகைகள் எல்லாம் 3 மாதங்கள் மட்டுமே செயல்பாடுகளில் இருந்திருக்கிறது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் திமுக எப்படி வாக்கு வங்கிக்காக மட்டுமே அரசியல் நடத்துகிறதோ, அதேபோல கேஜ்ரிவால் அங்கே அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்.

இந்த பிரச்சாரத்தில் தமிழர்கள் வசிக்கும் பல இடங்களுக்குச் சென்றேன். இந்தியாவை ஆளக்கூடிய கட்சி, டெல்லியை ஆண்டால் அங்குள்ள மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி பேசினேன்.

இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட 50 தொகுதிகளுக்கும் மேலாக பாஜக வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in