துப்புரவு பணியாளர் இறந்தால் ரூ.1 கோடி: ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி

துப்புரவு பணியாளர் இறந்தால் ரூ.1 கோடி: ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி
Updated on
1 min read

டெல்லி மாநில சட்டப் பேரவைக்கு வரும் 8-ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

துப்புரவு பணியாளர்கள் பணியில் இருக்கும்போதே இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ 1.கோடி நிவாரணம், தடையில்லா மின்சாரம் மற்றும் சுத்தமான குடிநீர், பள்ளிகளில் தரமான கல்வி, தேசபக்தி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துதல் போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் ஆரம்பித்தல், பள்ளி இறுதிப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி அளித்தல் போன்ற பல்வேறு வாக்குறுதிகள் கூறப்பட்டுள்ளன.இதுதவிர, புராரி, கிராரி, பிஜ்வசன், நரேலா, கரவால் நகர், மேங்கோலுரி போன்ற இடங்களை மெட்ரோ ரயில் திட்டம் மூலம் இணைத்தல், 500 கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமான இடங்கள் மெட்ரோ ரயில் மூலம் இணைத்தல் என்பன உள்ளிட்ட 28 அம்சங்கள் ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in