

எல்லையில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி, பாகிஸ்தான் படையினர் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து பிஎஸ்எப் உயரதி காரி ஒருவர் நேற்று கூறும்போது, “ஜம்மு மாவட்டம், ஆர்.எஸ்.புரா செக்டார், சர்வதேச எல்லைப் பகுதி யில் சனிக்கிழமை இரவு 10.40 மணியளவில் இந்திய எல்லைச் சாவடிகள் மீது பாகிஸ்தான் படை யினர் இரு பீரங்கி குண்டுகளை வீசினர். இதில் நமது வீரர்கள் யாருக் கும் பாதிப்பு இல்லை. இத்தாக்கு தலுக்கு பிஎஸ்எப் தரப்பில் பதிலடி தரப்படவில்லை” என்றார்.
ஜம்மு மாவட்டம், அக்னூர் செக்டார், சர்வதே எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் காலை பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுட்டும், பீரங்கி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் 12 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக ஆர்.எஸ்.புரா பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எல்லையில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி கடந்த ஜூலை மாதம் 18 முறை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 ஜவான்கள் உட்பட 4 பேர் இறந்துள்ளனர். 14 பேர் காயம் அடைந்துள்ளனர்.