

கடந்த வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகம் அருகே சிஏஏ போராட்டக்காரர்கள் மீது ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் அவருக்கு துப்பாக்கி அளித்த மல்யுத்த வீரர் அஜீத் (25) டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் சஹஜ்புரா கிராமத்தைச் சேர்ந்த மல்யுத்த வீரர் அஜீத், சிஏஏ ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவனுக்கு துப்பாக்கி அளித்தது தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.
இவர் பிப்.4ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஜனவரி 30ம் தேதியன்று ஜாமியா அருகே சிஏஏ எதிர்ப்பாளர்களை நோக்கி கத்திய படியே துப்பாக்கியால் சுட்டான் ஒரு சிறுவன். இதில் மாணவர் ஒருவர் காயமடைந்தார்.
போலீஸ் இவரைப் பிறகு கைது செய்தது. இவர் மீது கொலை முயற்சி, ஆயுதச்சட்டம் உள்ளிட்ட வழக்குகள் பாய்ந்துள்ளன. சிறுவன் தற்போது பாதுகாப்புக் காவலில் இருக்கிறான்.