

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
"சபரிமலை விவகாரம் மட்டுமன்றி, மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது, பார்சி பெண்கள் வேறு சமுதாய ஆண்களை திருமணம் செய்யும்போது அவர்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது குறித்தும் புதிய அமர்வு விசாரிக்கும்" என்று தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
என்னென்ன அம்சங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பது குறித்து மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் ஆலோசித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வழக்கறிஞர்களிடம் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தெரிவித்தார். இந்த பின்னணியில் சபரிமலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.