

இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில், தேசப்பற்று தொடர்பான 3 முக்கிய விஷயங்களை நினைத்து பார்க்க விரும்புகிறேன். முதலாவது, இந்திய நில அமைப்பு.
இதை மனித உருவத்தோடு ஒப்பிட்டு நாம் பார்க்கிறோம். ‘இந்திய தாய்’ என்றும் ‘பாரத மாதா’ என்றும் அழைக்கிறோம். இந்தியாவை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி இருக்கிறோம். சேலை கட்டிய பெண்ணை பாரத மாதாவாக சித்தரித்து இந்திய வரைபடத்துக்குள் பார்க்கிறோம். ஜம்மு காஷ்மீர் இருக்கும் இடத்தில் பாரத மாதாவின் தலை, தெற்கில் கால் பகுதி, பாரத மாதா உடுத்தியுள்ள சேலையின் முந்தானை வடகிழக்கு பகுதியில் பறப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய எல்லையை பொறுத்த வரை சீனாவிலும் மற்றும் காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகள் பாகிஸ்தானிலும் உள்ளன. இதை அரசின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் காட்ட முடியாது. ஆனால், வெளிநாடுகள் வெளியிடும் வரைப்படங்களில் இந்திய எல்லையை வேண்டுமென்றே தவறாக வெளியிடும் போது, அதை சுட்டிக் காட்டி திருத்துவதற்கு இந்திய அரசு நேரத்தை செலவழிக்கிறது. ஆனாலும் கூட அது போன்ற வரைபடங்களை இன்னும் பலர் தெரியாமல் பயன்படுத்தி கொண்டுதான் இருக்கின்றனர். இதை ஊடகங்களும் அவ்வப்போது கோபத்துடன் சுட்டிக் காட்டி செய்திகள் வெளியிடுகின்றன. பெரும்பாலான இந்தியர்களைப் பொறுத்த வரை, பாரத மாதா (வரைபடம்) விஷயத்தில் சிறிய மாற்றங்கள் செய்வது கூட பெரும் குற்றம். அவர்களுக்கு பாரத மாதாவின் தூய்மை, எல்லை மீறப்பட கூடாது.
இரண்டாவது, இந்திய வரைபடத்தின் வரலாற்றை ஒருவர் புரிந்து வைத்திருக்கும் நிலை. கடந்த 1947-ம் ஆண்டு வரை இந்தியா என்பது காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடு. அந்த கால கட்டத்தில் எல்லையை விரிவுபடுத்த மற்ற இடங்களை ஆக்கிரமிப்பதுதான் காலனி நாட்டின் நடவடிக்கையாக இருந்தது. அந்த வகையில் பல பகுதிகள் குறிப்பாக வடகிழக்கு பகுதிகள், காலனி ஆதிக்கத்தில் இருந்த பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தினரால் போரில் வெல்லப்பட்டு சேர்த்துக் கொள்ளப்பட்ட பகுதிகள். இந்த வரலாறு இந்தியர்களுக்கு சொல்லித் தரப்பட வில்லை.
வடகிழக்கு பகுதிகளில் கடுமையான சட்டங்கள் இருப்பதால், ராணுவம் சர்வ அதிகாரத்துடன் செயல்படுகிறது. இந்தியாவின் பெரும்பாலான பகுதியினர் ராணுவத்தினரின் செயல்பாடுகளால் சுகமாக வாழ்கின்றனர். தேசப்பற்றுக்கு பாதுகாவலர்களாக அவர்களை பற்றிய எண்ணம்தான் அதற்கு காரணம்.
மூன்றாவது, இந்திய ராணுவத்தின் நிலை.இந்தியா அயல்நாட்டு வீரர்கள் அடங்கிய ராணுவத்தைதான் வைத்திருந்தது. அந்த ராணுவம்தான் கடந்த 1947 ஆகஸ்ட் மாதம் ஒரே இரவில் இந்திய தேசிய ராணுவமாக மாறி விட்டது. பாகிஸ்தானுக்கும் அதே நிலைதான்.
இந்திய ராணுவம் மிக நீண்டது, அதன் போர் பாரம்பரியத்தை நினைத்து பெருமைப்படலாம். ஆனால் அதன் இயல்புணர்வு பணத்துக்காக வேலை செய்யும் (அயல்நாட்டு வீரர்களை கொண்ட) ராணுவமாக இருந்ததை வரலாற்றில் அறிய முடிகிறது.
இந்த வரலாற்று தகவல்களுக்கும் தற்போது பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்படும் வரலாறுக்கும் முரண்பாடுகள் உள்ளன. அவற்றை ஒப்பிட்டு சரியானவற்றை கற்றுத்தர வேண்டியது அவசியம். நான் மேற்கூறிய 3 முக்கிய விஷயங்களிலும் எந்த நேரத்திலும் மாற்றங்கள் வரலாம். ஆனால், ஆராய்ந்து பார்க்க கூடிய சிறிய அளவிலான வாசகர்களுக்காக எழுத வேண்டிய விஷயங்கள்தான் அவை.