

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையி லான 6 மாதங்களில் சாதி, மத மோதல்கள் கணிசமாக அதிகரித் துள்ளன. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2014-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் நாடு முழுவதும் 252 கலவரங்கள் நடைபெற்றன. இதில் 33 பேர் உயிரிழந்தனர்.
நடப்பு 2015-ம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையில் 330 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 51 பேர் உயிர்பலியாகினர். 1092 பேர் படுகாயம் அடைந்தனர்.
கலவரம் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் வரிசையில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. பிஹார், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.