Published : 01 Feb 2020 07:24 AM
Last Updated : 01 Feb 2020 07:24 AM

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

2020-21-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார்.

11 மணிக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கியவுடன் முதலில் பட்ஜெட் தாக்கல் நிகழ்வு நடைபெறும்.

மத்திய அரசு பொறுப்பேற்று 7 மாதங்களில் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5-ம்தேதி இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

தற்போது அவர் தாக்கல் செய்வது முழுமையான பட்ஜெட் ஆகும். 12 மாதங்களில் 3 பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும். ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை முதல்கட்டமாக நடைபெறும். இரண்டாவது கட்டமாக கூட்டத் தொடர் மார்ச் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x