Published : 30 Jan 2020 11:08 AM
Last Updated : 30 Jan 2020 11:08 AM

சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு விரைவில் பணமில்லா சிகிச்சை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டம்

சாலை விபத்தில் சிக்கி பணம் இல்லாத காரணங்களுக்காக சிகிச்சை மறுக்கப்படுவதை ஒழிக்க மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் விரைவில் பணமில்லா சிகிச்சைத் திட்டத்தை அறிவிக்கவுள்ளது.

இந்த இலவச சிகிச்சைத் திட்டத்துக்காக பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய காலத்தில் விபத்து காப்பீடுத் தொகை வழங்குவது தொடர்பாக நிதின் கட்கரி பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை வலியுறுத்தினார்,

இத்திட்டம் எப்படிச் செயல்படுத்தப்படும், இலவச சிகிச்சை என்பது எப்படி போன்ற விவரங்கள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.

விபத்து நடந்து சில மணி நேரங்கள், ‘கோல்டன் அவர்ஸ்’ என்று கருதப்படுகிறது, அதாவது காயமடைந்தவர் பலியாகாமல் இருக்க உரிய சிகிச்சை உரித்த காலத்தில் அளித்துக் காப்பாற்றும் திட்டமாகும் இது.

மோட்டார் வாகன உரிமம், சாலைப்போக்குவரத்து அமைச்சக இயக்குநர் பியூஷ் ஜெயின், கோல்டன் ஹவர் பணமில்லாச் சிகிச்சையை பிரதமர் ஜன் ஆரோக்கியா திட்டத்துடன் இணைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்.

ஆனால் சிகிச்சைக்கான நிதி என்பது விபத்தில் சிக்கியவர் காப்பீடு வைத்துள்ளாரா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்தது. ஆயுஷ்மான் பாரத் அல்லது ஏதோவொரு அரசு காப்பீட்டுத் திட்டத்தில் இருந்தால் சிகிச்சைக்கு இவை மூலம் நிதி வழங்கப்படும். சரி காப்பீடு இல்லாதவர்களுக்கு என்ன வழி? இருக்கிறது என்கிறது அமைச்சகம், மோட்டார் வாகன விபத்து நிதியம் மூலம் இவர்களுக்கும் பணமில்லா சிகிச்சைக்கு உதவப்படும்.

கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியையும் இதனுடம் சேர்க்கலாமா என்றும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு சாலைப் போக்குவரத்து அமைச்சகம், கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x