

முப்படை வீரர்களின் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லி விஜய் சவுக்கில் இன்று நடைபெற்றது.
குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படை வீரர்கள் தங்களது முகாமுக்கு திரும்பும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. டெல்லியில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் முப்படைகளின் இசைக்குழுக்கள் நடத்திய அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.