எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்பட புகழ்பெற்ற 10 பெண்கள் பெயரில் பல்கலை. இருக்கை

எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்பட புகழ்பெற்ற 10 பெண்கள் பெயரில் பல்கலை. இருக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: தேசிய பெண் குழந்தைகள் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு துறைகளில் புகழ் பெற்ற 10 பெண்களின் பெயரால், பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் அமைக்க அப்போது மத்திய அரசு முடிவு செய்தது. இந்தப் பட்டியலில் பாரத ரத்னா விருது பெற்ற பிரபல கர்நாடக இசைப்பாடகி மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன், ஹன்சா மேத்தா (கல்வி), கமலா சோஹோனி (அறிவியல்), ஆனந்தி பாய் கோபால்ராவ் ஜோஷி (மருத்துவம்), தேவி அகில்யாபாய் ஹோல்கர் (நிர்வாகம்), மகாதேவி வர்மா (இலக்கியம்), ராணி கெய்டின்லியு (சுதந்திரப் போராட்டம்), அம்ரிதா தேவி (வன விலங்கு பாதுகாப்பு), லீலாவதி (கணிதம்), லால் டெட் (கவிதை) ஆகியோரின் பெயர்களாலும் பல்கலைக்கழகங்களில் இருக்கைகளை உருவாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in