

காங்கிரஸ் எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதால், நிலம் கையக மசோதாவை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக்குழு தனது அடுத்த சந்திப்புக்கு 6 நாள் அவகாசம் கோரியுள்ளது.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆராய்ந்து வருகிறது. அந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜீவ் சதவ் உறுப்பினராக உள்ளார். நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்பிக்கள் 25 பேர் இடைநீக்கம் செய்யப் பட்டனர். அவர்களில் ராஜீவ் சதவும் ஒருவர் ஆவார்.
கூட்டுக்குழுவில் அனைவரின் ஒப்புதலும் முக்கியம். ஆனால் அக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட் டிருப்பதால், அவர் இல்லாமல் எந்த முடிவுகளையும் கூட்டுக்குழுவால் எடுக்க முடியாது.
எனவே, இந்த மசோதா தொடர் பான தனது அடுத்த சந்திப்பை 6 நாட்களுக்கு கூட்டுக்குழு ஒத்தி வைத்திருக்கிறது. நேற்று முன்தினம்தான் 4 நாட்கள் அவகாசம் கேட்டு, வரும் 7-ம் தேதி சந்திப்பை நிகழ்த்துவதற்கு கூட்டுக்குழு அனுமதி கேட்டது குறிப்பிடத்தக்கது.