‘‘ஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்காரர்களை ஒரு மணிநேரத்தில் அகற்றுவோம்’’ - பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு

பர்வேஷ் வர்மா- கோப்புப் படம்
பர்வேஷ் வர்மா- கோப்புப் படம்
Updated on
1 min read

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டெல்லி ஷாகின்பாக்கில் போராட்டம் நடத்துபவர்களை ஒரு மணிநேரத்தில் அகற்றுவோம் என பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா பேசினார்

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி: பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில் பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா டெல்லி தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

‘‘டெல்லியில் நடைபெறுவது சாதாரண சட்டப்பேரவைத் தேர்தல் அல்ல. இந்த நாட்டின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்தை உறுதிபடுத்தும் தேர்தல்.

டெல்லியில் ஷாகின்பாக் பகுதியில் போராட்டம் நடத்துபவர்கள் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தான். அவர்களால் உங்கள் உடமைக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்படும். அவர்கள் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலையில் ஈடுபடுவார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகின்பாக் பகுதியில் போராட்டம் நடத்துபவர்களை ஒரு மணிநேரத்தில் கலைத்து விடுவோம். சட்டவிரோதமாக செயல்படுபவர்களை வெளியேற்றுவோம்.’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in