Published : 28 Jan 2020 07:16 AM
Last Updated : 28 Jan 2020 07:16 AM

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக மேற்கு வங்க சட்டப் பேரவையில் அம்மாநில அரசு நேற்று தீர்மானம் நிறைவேற்றியது.

கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ் தானைத் தொடர்ந்து 4-வது மாநில மாக மேற்கு வங்கத்தில் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சம் அடைந்த முஸ்லிம் அல்லாதவர் களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திருத்தியுள்ளது. இந்த சட்டத் திருத்தத்துக்கு காங் கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை முறியடிக்கும் வகையில் மக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வரும் திரிண மூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தொடக்க முதலே சிஏஏ-வை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

இந்நிலையில், சிஏஏ-வுக்கு எதி ராக மேற்கு வங்க சட்டப்பேரவை யில் நேற்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. மாநில சட்டப் பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி இதனை அறிமுகம் செய்தார்.

அந்த தீர்மானத்தில், “திருத்தப் பட்ட குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறவேண்டும், தேசிய குடியுரிமை சட்டத்தை (என்ஆர்சி) அமல்படுத்தும் திட்டம், தேசிய மக்கள்தொகை பதி வேட்டை (என்பிஆர்) புதுப்பிக்கும் திட்டம் ஆகியவற்றை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் மீது முதல் வர் மம்தா பானர்ஜி பேசும்போது, “புதிய குடியுரிமை சட்டம் மனித நேயத்துக்கு எதிரானது. இந்த சட் டம் அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிராக உள்ளது. சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டும்.

மேற்கு வங்கத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை அமல்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவற்றால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவோமோ என மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதனால் அவர்கள் அனைத்து வகை அட்டைகளும் பெறுவதற்காக வரிசையில் நிற்கின்றனர்.

எங்களுக்கு எதிரான குறுகிய அரசியல் வேறுபாடுகளை இடது சாரிகளும் காங்கிரஸ் கட்சியினரும் புறந்தள்ள வேண்டும். நாட்டை காப் பாற்றுவதற்காக பாஜக அரசுக்கு எதிராக எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். என்பிஆர் தொடர்பாக டெல்லியில் மத்திய அரசு நடத்திய கூட்டத் தில் மேற்கு வங்க அரசு பங்கேற்க வில்லை. பாஜக விரும்பினால் எனது அரசை டிஸ்மிஸ் செய்ய முடியும் என்றபோதிலும் துணி வுடன் அக்கூட்டத்தை நாங்கள் புறக்கணித்தோம்” என்றார்.

மார்க்சிஸ்ட், காங். ஆதரவு

இந்த தீர்மானத்துக்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித் தனர். “இந்தியாவில் தஞ்சம் அடைந்த அகதிகளுக்கு குடி யுரிமை வழங்க சிஏஏ வகை செய் கிறது. இதற்காக பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா ஆகியோ ருக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்றனர்.

இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறை வேறியது.

4-வது மாநிலம்

கேரளா, பஞ்சாப், ராஜஸ் தானைத் தொடர்ந்து சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய 4-வது மாநிலம் மேற்கு வங்கம் ஆகும். எதிர்க்கட்சிகளை விட மத்திய அரசுடன் நெருக்கமாக இருக்கும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x