

எந்த ஒருநாட்டிலும் எதிர்க்கட்சிகள் வலுவாக இருந்தால்தான் ஆளும் கட்சிக்கு ஒரு செக் இருக்கும் என்று கூறிய நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி, இலவசங்கள் அளிப்பதற்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
ஜெய்பூர் இலக்கிய விழாவில் அவர் பேசியதாவது:
சிங்கப்பூரில் வெற்றிகரமான எதேச்சதிகாரி இருந்தார் என்றும் ஜிம்பாவே என்றும் நாம் குமட்டும் அளவுக்குப் பேசலாம். ஒரு குறிப்பிட்டக் கட்டத்தில் அதிகாரம் என்பது வெறும் மாயைதான்.
இந்தியாவுக்குத் தேவை நல்ல எதிர்க்கட்சி, நல்ல எதிர்க்கட்சி என்பது ஜனநாயகத்தின் இருதயமாகும். ஆளும் கட்சிக்கு செக் வைக்க வேண்டுமெனில் நல்ல எதிர்க்கட்சிகள் எந்த நாட்டுக்கும் அவசியம்.
வறுமை என்பது ஒன்றல்ல பன்முகப் பிரச்சினையாகும். பல நோய்கள் உள்ளன, சிலர் கல்வி ஏழைகள், சிலர் ஆரோக்கிய ஏழைகள், சிலர் பணமில்லாத, சொத்தில்லாத ஏழைகள். எது இல்லை என்பதை சரியாக வடிவுறுத்த வேண்டும். இந்த அனைத்தையும் ஒரு தீர்வில் சரி செய்து விடலாம் என்பது மாயை, அது ஒருபோதும் வேலை செய்ததில்லை என்பதே உண்மை.
ஏழைமக்களிடத்தில் பணத்தைக் கொடுத்தால் அவர்கள் விரயம் செய்து விட்டு மீண்டும் வறுமைக்குள் வீழ்வார்கள் என்ற கருத்து மிகமிகத் தவறான ஒன்று. வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு இலவசங்களையும் இருக்க இடமும் வழங்க வேண்டும், இதனால் ஒன்றும் கெட்டு விடப் போவதில்லை.
ஏழைகளின் திறமைக்கு எதிராக ஏகப்பட்ட அனுமானங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு ஏதாவது ஒரு சொத்தை அளியுங்கள், கடனாக அல்ல, இலவசமாக அளியுங்கள். பசுவையோ, கால்நடைகளையோ, சிறு மதிப்புடைய நகையையோ அளித்துப் பாருங்கள் 10 ஆண்டுகளில் இவர்கள் நிலை என்னவென்பதையும் பாருங்கள். இவர்கள் 25% பணமுள்ளவர்களாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். மேலும் முயன்று உழைக்க இது அவர்களுக்கு ஊக்கமளிக்கும், சொத்தளிக்காதவர்களிடத்தில் காணப்படும் உழைப்பை விட இவர்கள் அதிக உழைப்பை இடக்கூடியவர்கள்.
இதனை இந்தியாவில் செய்ய முடியும், நீடித்த முறையில் செய்யக்கூடியதுதான். இந்த முதலீட்டின் மீதான ரிடர்ன் விகிதம் என்னவென்பதை நாங்கள் கணக்கிட்டோம், இந்தியாவில் இது 400%. இதில் முதலீடு செய்தால் அதிலிருந்து வரும் நிகர வருவாய் முதலீட்டை விட 4 மடங்கு அதிகம். இதே பரிசோதனை பங்களாதேஷில் 10 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆம் அங்கு முதலீட்டை விட 4 மடங்கு நிகர வருவாய் கிடைத்தது.
என்று கூறுகிறார் நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி