Last Updated : 27 Jan, 2020 03:58 PM

 

Published : 27 Jan 2020 03:58 PM
Last Updated : 27 Jan 2020 03:58 PM

உ.பி.யில் முதல் ஆர்.எஸ்.எஸ். ராணுவப் பள்ளி: ஏப்ரல் முதல் வகுப்புகள் தொடங்குவதாக அறிவிப்பு

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷெஹரில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவாக் (ஆர்.எஸ்.எஸ்) நடத்தும் முதல் ராணுவப் பள்ளியின் வகுப்புகள் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளிக்கு ராஜூ பயா சைனிக் வித்யா மந்திர் (ஆர்.பி.எஸ்.வி.எம்) என்று அழைக்கப்படும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளரும் ஆர்.பி.எஸ்.வி.எம் இயக்குனருமான கேணல் சிவ் பிரதாப் சிங் கூறியதாவது:

உத்தரப் பிரதேசத்தின் புலந்தஷெஹரில் தொடங்கப்படும் இந்த ராணுவப் பள்ளி முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த ராஜு பய்யாவின் பெயரில் வரும் ஏப்ரல் முதல் தொடங்கப்படுகிறது. இந்த ராணுவப் பள்ளி பள்ளி கட்டிடம் கிட்டத்தட்ட தயாராக உள்ளது.

இந்த ராணுவப் பள்ளி 6 ஆம் வகுப்புக்கு 160 மாணவர்களின் முதல் தொகுதிக்கான விண்ணப்பங்களை வரவேற்கத் தொடங்கியுள்ளது. நாங்கள் என்.டி.ஏ, கடற்படை அகாடமி மற்றும் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வோம்.

மாணவர்களாக சேர விரும்புவோர் பிப்ரவரி 23 வரை பதிவுசெய்துகொள்ள முடியும். நுழைவுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும். பகுத்தறிவு, பொது அறிவு, கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை ஆராய்வோம். எழுத்துத் தேர்வுக்குப் பிறகு, நேர்காணலும் பின்னர் மருத்துவ பரிசோதனையும் இருக்கும். ஏப்ரல் 6 முதல் அமர்வைத் தொடங்குவோம்.

போரில் கொல்லப்பட்ட பணியாளர்களின் குழந்தைகளுக்கு எட்டு இடங்கள் ஒதுக்கப்படும். தியாகிகளின் வார்டுகளுக்கும் சில வயது தளர்வு கிடைக்கும். பள்ளியில் வேறு இட ஒதுக்கீடு இருக்காது, அது சிபிஎஸ்இ முறையைப் பின்பற்றும்.

ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களை பணியமர்த்துவதற்கான செயல்முறையையும் பள்ளி ஏற்கெனவே தொடங்கி நடைபெற்றுவருகிறது. இப்பணிகள் பிப்ரவரி இறுதிக்குள் முடிக்கப்படும்

பள்ளியின் முதல்வரை ஆர்.எஸ்.எஸ் கல்வி பிரிவு வித்யா பாரதி மூலம் நியமிக்கப்படும்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவருக்கும் சீருடைகள் உண்டு - வெளிர் - நீல நிற சட்டை மற்றும் மாணவர்களுக்கு அடர் - நீல கால்சட்டை; சாம்பல் - வண்ண கால்சட்டை மற்றும் ஆசிரியர்களுக்கு வெள்ளை சட்டை.

இந்த ராணுவப் பள்ளி, வளாகத்திலேயே தங்கி பயிலும் ஒரு பள்ளி ஆகும்.

மாணவர்களுக்கு கல்வி மற்றும் தார்மீக மற்றும் ஆன்மீக வழிகாட்டுதல்களை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம், இது பள்ளி வளாகத்திலேயே தங்கிப் பயிலும் ஒரு பள்ளியில் மட்டுமே சாத்தியமாகும்.

இவ்வாறு ராணுவப் பள்ளியின் இயக்குநர் கேணல் சிவ் பிரதாப் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x