Last Updated : 27 Jan, 2020 03:21 PM

 

Published : 27 Jan 2020 03:21 PM
Last Updated : 27 Jan 2020 03:21 PM

குடியுரிமைச் சட்டம் என்பிஆர், என்.ஆர்.சி. க்கு வழிவகுக்குமெனில்  ஜின்னாவின் கருத்துதான் வெற்றி பெறும்: சசி தரூர் கருத்து 

குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு வழிவகுக்கும் எனில் குடியுரிமை என்பது மதத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்ற ஜின்னாவின் கருத்தை பிரதிபலிப்பதாகிவிடும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.

ஜெய்பூர் இலக்கிய விழாவில் குடியரசுத் தினத்தன்று சசி தரூர் பேசும்போது, “ஜின்னா முழுதும் வெற்றி பெற்று விட்டார் என்று நான் கூறவில்லை, ஆனால் சிஏஏ, என்பிஆர்., என்.ஆர்.சி மூலம் ஜின்னா வெற்றிப் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்று கூறுகிறேன். ஆனால் இன்னும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, ஜின்னாவின் மதம் சார்ந்த கருத்தா அல்லது அனைத்து மதங்களும் சமமே என்ற காந்தியக் கொள்கையா என்பதில் இன்னும் தெரிவு நமக்கு இருக்கிறது.

டென்னிஸ் ஆட்ட பரிபாஷையில் கூற வேண்டுமெனில் சிஏஏ மூலம் ஜின்னா முதல் செட்டை வென்றிருக்கிறார். அடுத்தக் கட்டம் என்பிஆர் மற்றும் என்.ஆர்.சி. அதையும் செய்து முடித்து விட்டால் ஜின்னா முழுதும் வெற்றி பெற்று விடுவார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் என்பிஆர் நடத்தப்பட்டது என்று கூறினால் அதில் உங்கள் பெற்றோர் பிறப்பிடம் எது என்று கேட்கப்படவில்லை என்றே கூறுகிறோம். யுபிஏவின் என்பிஆரில் ‘சந்தேகத்திற்கிடமான குடியுரிமை’ என்று குறிப்பது கிடையாது, இந்த வார்த்தையை தற்போதைய அரசுதான் கண்டுபிடித்துச் சேர்த்துள்ளது. இது முழுக்கவும் பாஜகவின் கண்டுபிடிப்பு.

உங்களுக்கு இந்த நாட்டில் மக்களை நேரடியாகச் சந்தித்து பேட்டி காணமுடியும் என்ற அதிகாரம் அளித்தால், அதில் ‘சந்தேகத்திற்குரிய குடிமக்கள்’ யார் என்று அடையாளம் காணச்சொன்னால் நீங்கள் யாரை அடையாளம் காண்பீர்கள் என்பது நன்கு தெரிந்த விஷயம். அது ஒரே பிரிவைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்க்ள், அது சிஏஏவில் குறிப்பிடப்படவில்லை, இது நடந்தேறினால் ஜின்னாதான் வெற்றி பெற்றவராவார்.

அவர் என்ன கூறுவார், பாருங்கள் நான் 1940-லேயே கூறினேன் நாம் தனித்தனி நாடுகள், முஸ்லிம்களுக்கு தனி நாடு அவசியம் என்று நான் கூறினேன், என்றுதான் ஜின்னா இன்று இருந்தால் சிஏஏ, என்பிஆர், என்.ஆர்.சி. பற்றி கூறுவார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x