Published : 27 Jan 2020 06:50 AM
Last Updated : 27 Jan 2020 06:50 AM

குடியரசு தின விழா அணிவகுப்பில் அனைவரின் கவனத்தை ஈர்த்த அய்யனார்

டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி கம்பீரமாக வலம் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. படங்கள்: பிடிஐ

புதுடெல்லி

குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அய்யனார் சிலை அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநிலஅரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் சார்பில் 16 அலங்கார ஊர்திகளும் மத்திய அமைச்சகங்கள், தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் 6 அலங்கார ஊர்திகளும் கம்பீரமாக அணிவகுத்தன.

‘தவளை இனத்தை காப்பாற்றுங்கள்' என்ற விழிப்புணர்வுடன் தவளை சிலையுடன் கோவா மாநிலஅலங்கார ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்றது. கிராமத்துக்கு திரும்புவோம் என்ற கொள்கையை காஷ்மீர் யூனியன் பிரதேச அலங்கார ஊர்தி வலியுறுத்தியது.

காஷ்மீர் முதல் குமரி வரை

மத்திய பொதுப்பணித் துறைசார்பில் ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை' என்ற தலைப்பிலான அலங்கார ஊர்தி கம்பீரமாக கடந்து சென்றது. இதில் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம், காஷ்மீரின் தால் ஏரி படகு உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா உட்பட பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் கலந்து கொண்டன.

17 அடி உயர சிலை

தமிழகத்தின் சார்பில் தமிழர்களின் காவல் தெய்வமான அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி கம்பீரமாக அணிவகுத்து சென்றது. 17 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அய்யனார் சிலை, அவருக்கு முன்னால் குதிரையும் காவலாளிகளும் இருப்பது போல் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் பாரம்பரிய இசை, நடனத்துடன் அனைவரின் கவனத்தையும் அய்யனார் ஈர்த்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x