குடியரசு தினத்தை எதிர்த்த மாவோயிஸ்ட்டுகள்: பதிலடி கொடுத்த கிராம மக்கள்; ஒருவர் பலி

குடியரசு தினத்தை எதிர்த்த மாவோயிஸ்ட்டுகள்: பதிலடி கொடுத்த கிராம மக்கள்; ஒருவர் பலி
Updated on
1 min read

கிராம மக்களை அச்சுறுத்த நினைத்து துப்பாக்கியால் சுட்ட மாவோயிஸ்டை அம்பு எய்தி கிராம மக்கள் கொன்ற சம்பவம் ஒடிசாவில் நேற்றிரவு நடந்துள்ளது.

மலன்கிரி மாவட்டத்தில் ஜந்துரை கிராமத்தில் நடந்த இச்சம்பவத்திற்குப் பிறகு உயிரிழந்த மாவோயிஸ்ட்டின் உடலை அருகிலுள்ள ஹந்தல்குடா கிராமத்தில் அமைந்துள்ள ராணுவ முகாமில் பி.எஸ்.எஃப் ஜவான்களிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனர்.

மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது கிராமத்தில் மாவோயிஸ்டுகளை கிராம மக்கள் தாக்கிய முதல் சம்பவம் இது

இதுகுறித்து காவல்துறை மல்கன்கிரி காவல் கண்காணிப்பாளர் ஆர் டி கிலாரி கூறியதாவது:

ஒடிசாவின் கடைக்கோடி கிராமமான ஜந்துரையில் நேற்று மாவோயிஸ்டுகள் இருவர் வந்தனர். அவர்கள் அப்பகுதி மக்களிடம் குடியரசு தினத்தை கறுப்புதினமா அனுசரிக்கும்படி கட்டளையிட்டனர். ஆனால் அப்பகுதி மக்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. அது மட்டுமின்றி அவர்கள் இருவரையும் கிராமத்திலிருந்து விரட்டியடித்துள்ளனர்.

விரட்டியடிக்கப்பட்ட மாவோயிஸ்டுகள் தொலைவிலிருந்து கிராம மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

மக்களை அச்சுறுத்துவதற்காக மாவோயிஸ்டுகள் வெற்றுத் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, கிராமவாசிகள் தங்கள் பாரம்பரிய ஆயுதங்களான வில் மற்றும் அம்புகள் மூலம் பதிலடி கொடுத்தனர், தவிர அவர்களில் ஒரு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமடைந்தார்.

இப்பகுதியில் மாவோயிஸ்டுகள் இருப்பதால் அரசின் வளர்ச்சித் திட்டங்கள் பலவற்றையும் இழக்கவேண்டியதாகிவிட்டது என்று கிராமவாசிகளின் ஏற்கெனவே கவலையில் இருந்தனர். இதனால் மாவோயிஸ்டுகள் குடியரசு தினத்தை கறுப்பு தினமாக அனுசரிக்கும் அவர்களது கட்டளையால் மக்கள் கோபமடைந்துனர்.

அண்மையில், மாவட்டத்தில் நீரால் துண்டிக்கப்பட்ட ஜந்துரை கிராமத்திற்கு சாலை வசதிகளை செய்வதை மாவோயிஸ்டுகள் எதிர்த்ததும் இப்பகுதி மக்களின் கோபத்திற்கு முக்கிய காரணமாகும்.

ஆந்திராவை ஒட்டிய ஒரு புறத்தில் ஒரு காடும், அதன் மூன்று பக்கங்களிலும் பாலிமேலா நீர்த்தேக்கத்தின் நீரும் சூழப்பட்டிருப்பதால், இந்த கிராமம் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ள கிராமத்தில் சாலை வசதிக்காக அவர்கள் ஏங்கி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டார், மற்றொருவர் பலத்த காயமடைந்தார், கிராமத்தில் மாவோயிஸ்டுகளை கிராம மக்கள் தாக்கிய முதல் சம்பவம் இது

மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது கிராமவாசிகள் பதிலடி கொடுத்ததாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மாவோயிஸ்டுகளின் பழிவாங்கும் தாக்குதலுக்கு கிராம மக்கள் அஞ்சுவதால் பி.எஸ்.எஃப் படை வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் ஆர் டி கிலாரி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in