

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக பிஹாரில் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் அமெரிக்கப் பல்கலைக் கழக ஆய்வு ஒன்றுக்காக வந்த 12 ஆய்வாளர்களை சிஏஏ ஆதரவு ஆய்வாளர்கள் என்று கருதி பிஹார் கிராம மக்கள்
12 பேர் கொண்ட ஆய்வுக்குழுவில் 4 பேர் பெண்கள். இவர்கள் லக்னோவில் உள்ள மோர்செல் ஆய்வு தனியார் நிறுவனத்துக்காக பணியாற்றுபவர்கள். இவர்கள் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக் கழக ஆய்வாளர் ஒருவருக்காக “அரசியல் முன்னுரிமைகளில் சமூக அடையாளத்தின் பங்கு” என்ற தலைப்பில் ஆய்வு நடத்த வந்தனர். தார்பங்கா மாவட்டத்தில் உள்ள ஜாகருவா என்ற கிராமத்தில் இவர்கள் வந்த போது கிராமத்தினர் இவர்களை சிஏஏ, என்பிஆர்., என்.ஆர்.சி. ஆதரவு ஆய்வாளர்கள் என்று நினைத்து மணிக்கணக்கில் சிறைப்பிடித்து வைத்தனர்.
அந்த பி.எச்டி ஸ்காலர் ஷிகார் சிங் ஆவார்.
இந்நிலையில் 12 பேரையும் கிராமத்தினர் சிறைப்பிடித்த செய்தியைக் கேட்டு ஜமால்பூர் காவல்நிலைய அதிகாரி அன்வர் அன்சாரி விரைந்து வந்து அவர்களை மீட்டு கிராமத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றார்.
இது போன்ற சம்பவம் 2வது முறையாக நடைபெறுகிறது, முன்னதாக ஜனவரி 17ம் தேதியன்று குர்கவான் தொலைக்காட்சி ஒன்று சர்வேக்காக வந்த போது கர்மகஞ்ச் பகுதியில் பொதுமக்கள் தொலைக்காட்சி ஊழியர்களைத் தாக்கினர்.
இது போன்ற சர்வேயில் ஈடுபட்ட வினித் குமார் என்பவர் தி இந்து, ஆங்கிலம் நாளிதழுக்குக் கூறும்போது, எங்கள் மீது தாக்குதல் நடத்தாவிட்டாலும் நாங்கள் கேள்விகள் கேட்கும் முன்னரே மக்கள் கொதிப்படைந்து விடுகின்றனர். சில இடங்களில் வன்முறையாகவும் நடந்து கொள்கின்றனர். எனவே சிஏஏ, என்.ஆர்.சி., என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக பெரிய போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில் மக்கள் கோபமடைந்துள்ள இந்தத் தருணங்களில் சர்வேக்கள் போன்றவற்றை நிறுத்திக் கொள்வதுதான் நல்லது என்றார்.