

சீனாவில் வேகமாக பரவி வரும் சளியையும் கடும் காய்ச்சலையும் ஏற்படுத்தும் கரோனா வைரஸ் நோயால் 26 பேர் இறந்துள்ளனர். 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சீனாவில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், சீனாவில் இருந்து மும்பைக்கு வந்த 2 பேருக்கு சளி மற்றும் இருமல் இருந்தது. அவர்களுக்கு கரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே, சீனாவிலிருந்து கேரளாவுக்கு திரும்பிய சுமார் 80 பேர் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.