

இ-டிக்கெட் மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒருவர், தனக்கு மாதம் ரூ.2 லட்சம் ஊதியம் வழங்கினால் ரயில்வே தகவல் தொழில்நுட்பத்தில் இருக் கும் கோளாறுகளை சரிசெய்து விடுவதாக பேரம் பேசியுள்ளார்.
ரயில்வே முன்பதிவில் பயணி களின் சிரமங்களை குறைப்பதற் காக இ-டிக்கெட் எனப்படும் ஆன் லைன் டிக்கெட் முறையை ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்தது. இதனிடையே, இந்த இ-டிக் கெட் முன்பதிவுக்கான மென் பொருளை சிலர் போலியாக தயாரித்து அதன் மூலம் கோடிக் கணக்கில் மோசடி செய்து வரு கின்றனர்.
அதாவது, போலி மென் பொருள் வாயிலாக ரயில்வே இ-டிக்கெட் இணையதளத்துக்குள் செல்லும் அவர்கள், அதிக அளவி லான டிக்கெட்டுகளை வெவ்வேறு பெயர்களில் பதிவு செய்து கொள் கின்றனர். பின்னர் டிக்கெட் தட்டுப் பாடு ஏற்படும் போது அவற்றை அதிக விலைக்கு விற்கின்றனர்.
இந்த மோசடி குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) விசாரித்து வருகிறது. இந்த மோசடி யில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் ஹமீது அஷ்ரப் என்பவரை ஆர்பிஎப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் தற்போது துபாயில் தலை மறைவாகி உள்ளதாக கூறப்படு கிறது. அவரை இந்தியாவுக்கு கொண்டு வர ஆர்பிஎப் முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில், ஆர்பிஎப் தலைமை இயக்குநர் அருண் குமாரின் வாட்ஸ்-அப் எண்ணை தொடர்புகொண்டு ஹமீது அஷ் ரப் அண்மையில் சில குறுஞ் செய்திகளை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ரயில்வே தகவல் தொழில்நுட் பத்தில் (ஐ.டி.) பல்வேறு கோளாறு கள் இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தி அதனை எளிதாக 'ஹேக்' செய்துவிட முடியும். இது குறித்து ரயில்வே தகவல் அமைப்பு கள் மையத்திடம் (சிஆர்ஐஎஸ்) பல முறை கூறிவிட்டேன். ஆனால், அவர்கள் அதனை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. சைபர் தொழில்நுட்பத் தில் அவர்களுக்கு போதிய நிபுணத் துவம் இல்லை என்பதையே இது காட்டுகிறது. அப்படியிருக்கும் போது, இந்த மோசடிகளுக்கு எவ்வாறு என்னை மட்டும் நீங் கள் பொறுப்பாக்க முடியும்?
எனக்கு ஒரு வாய்ப்பு தாருங் கள். ரயில்வே தகவல் தொழில் நுட்பத்தில் உள்ள அனைத்து கோளாறுகளையும் நான் சரி செய்து தருகிறேன். மேலும், யாரும் அந்த இணையதளத்தை ஹேக் செய்ய முடியாதவாறும் பார்த்துக் கொள்கிறேன். இதற் காக எனக்கு மாதம் ரூ.2 லட்சம் ஊதியம் கொடுத்தால் போதுமா னது. இனி ரயில்வே தொடர்பாக எந்த போலி இணையதளத்தையும் நான் உருவாக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.