டெல்லியில் 1000 பள்ளிகள் எங்கே? - கேஜ்ரிவாலுக்கு அமித் ஷா கேள்வி

டெல்லியில் 1000 பள்ளிகள் எங்கே? - கேஜ்ரிவாலுக்கு அமித் ஷா கேள்வி
Updated on
1 min read

டெல்லியில் 1000 பள்ளிகளை அமைக்க போவதாக வாக்குறுதி அளித்த அரவிந்த கேஜ்ரிவால் அதனை காட்ட முடியுமா என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி: பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

டெல்லியில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த டெல்லியில் 1000 பள்ளிகள் திறக்கப்படும் என கேஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். எங்கே அந்த பள்ளிகள் என அவர் விளக்கம் அளிக்க முடியுமா. டெல்லியில் நன்றாக நடந்து கொண்டிருந்த பள்ளிகளை நாசமாக்கிய தான் ஆம் ஆத்மி அரசின் சாதனை’’ என அமித் ஷா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in