தெலங்கானா மேலவைத் தேர்தலில் லஞ்சம்: சந்திரபாபு நாயுடு வீட்டுக்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார் - கார் டிரைவருக்கு நோட்டீஸ்

தெலங்கானா மேலவைத் தேர்தலில் லஞ்சம்: சந்திரபாபு நாயுடு வீட்டுக்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார் - கார் டிரைவருக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

தெலங்கானா மேலவைத் தேர்தலில் லஞ்சம் கொடுத்த வழக்கு தொடர்பாக நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக்குச் சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக இன்று லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ஆஜராகக் கோரி நாயுடுவின் மகன் லோகேஷின் கார் டிரைவருக்கு நோட்டீஸ் வழங்கினர்.

தெலங்கானா மேலவைத் தேர்தலில் தங்கள் கட்சி வேட் பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.5 கோடி பேரம் பேசப்பட்டு, முன்பணமாக ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்க முயன்றதாக தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டியை போலீ ஸார் கைது செய்தனர். பின்னர் இதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ. வான வெங்கட வீரய் யாவையும் போலீஸார் கைது செய்தனர். தற்போது இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அதுதொடர் பான தொலைபேசி உரையாடல் வெளியானது. இதைக் கண்டித்த நாயுடு, தெலங்கானா அரசு தனது தொலைபேசியை ஒட்டுக் கேட்பதாகக் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஆந்திராவில் தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவ் மீது 84 வழக்குகள் பதிவானது. இந்த வழக்கு ஆந்திர சிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனால் இரு மாநிலங்களுக்கிடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் நேற்று தெலங்கானா மாநில லஞ்ச ஒழிப்பு பிரிவைச் சேர்ந்த 2 போலீஸார் ஹைதராபாத்தில் உள்ள சந்திர பாபு நாயுடுவின் வீட்டுக்குச் சென்றனர்.

இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷின் கார் டிரைவர் கொண்டல் ரெட்டியி டம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும் அவர் இன்று லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் கூறி நோட்டீஸ் வழங்கினர். இதன் காரணமாக இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in