Last Updated : 22 Jan, 2020 03:33 PM

 

Published : 22 Jan 2020 03:33 PM
Last Updated : 22 Jan 2020 03:33 PM

ககன்யான் திட்டத்தின் முதல்பகுதியாக வரும் டிசம்பரில் ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும்:இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

இஸ்ரோ தலைவர் கே.சிவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி : படம் எஎன்ஐ

பெங்களூரு

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் பகுதியாக இரு ஆளில்லா விண்கலங்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு ஆளில்லா விண்கலமும், 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆளில்லா விண்கலமும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது என சிவன் தெரிவித்தார்

மனிதர்களின் விண்வெளிப்பயணம் மற்றும் ஆய்வுகள் தற்போதுள்ள சவால்கள் எதிர்காலத் தேவைகள் என்ற தலைப்பில் பெங்களூருவில் இன்று மாநாடு நடந்தது. இதில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ககன்யான் திட்டம் என்பது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் மட்டுமல்லாது, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் முயற்சியும் மட்டுமல்லாமல், மனிதர்கள் தொடர்ந்து விண்வெளியில் இருக்கும் வகையில் புதிய விண்வெளி நிலையம் உருவாக்குவதாகும்.
.
3 நிலைகளில் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். குறுகிய திட்டங்களாக ஆளில்லா விண்கலத்தை 2020 டிசம்பர் மாதத்திலும், 2021-ம் ஆண்டின் ஜூன் மாதத்திலும் விண்ணுக்கு அனுப்ப இருக்கிறோம். அதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டில் மனிதர்களுடன் செல்லும் விண்கலமான ககன்யானை அனுப்ப உள்ளோம்.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டமும், விண்வெளியில் மனிதர்கள் நிலையாக இருக்கும் வகையில், விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டமும் இருக்கிறது.

எங்களின் எதிர்காலத்தேவைகளுக்காக விண்வெளி வீரர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கும் நிலையத்தைப் பெங்களூருக்கு அருகே இஸ்ரோ தொடங்கி இருக்கிறது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது குறித்தும், அந்த அனுபவங்கள் குறித்தும் நாசா விண்வெளி நிலையத்துடனும், மற்ற விண்வெளி நிலையங்களுடனும், தொழில் நிறுவனங்களுடனும் இஸ்ரோ தொடர்ந்து பேசி வருகிறது. இஸ்ரோவின் நீண்டகால குறிக்கோளான கோள்களுக்கு இடையிலான ஆய்வு குறித்த பணிக்காகவும் ககன்யான் உதவும்.

ககன்யான் திட்டம் இஸ்ரோவின் திட்டம் மட்டுமல்ல, பல ஆய்வகங்கள், தொழிற்சாலைகள், பல்வேறு துறைகள் கொண்ட தேசத்தின் உண்மையான முயற்சி. ககன்யான் திட்டம் மூலம் புதிய அறிவியல் உருவாகும், நம்முடைய திறமைகள் மேம்படும்.

ஒரேயொரு விண்வெளி நிலையம் மட்டும் போதாது. பிராந்தியங்களுக்கான தேவைகளை ககன்யான் நிறைவேற்ற முயற்சிக்கும். வேலைவாய்ப்பு முதல் பாதுகாப்பு வரை பெரும்பாலான நாடுகளுக்கு ஒரேமாதிரியான இலக்குகள்தான் இருக்கும். இலக்குகளை நிறைவேற்ற இந்த கூட்டுறவு உதவி செய்யும்.
இவ்வாறு கே.சிவன் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x