கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 1.3 கோடி அதிகரித்த டெல்லி முதல்வரின் சொத்து மதிப்பு 

கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 1.3 கோடி அதிகரித்த டெல்லி முதல்வரின் சொத்து மதிப்பு 
Updated on
1 min read

டெல்லி முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து மொத்த சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.3 கோடி அதிகரித்துள்ளதாக தனது தேர்தல் வாக்குமூலத்தில் கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8 இல் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவாலின் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.நேற்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கேஜ்ரிவால் தனது தேர்தல் வேட்பு மனு வாக்குமூலத்தில் 2020ல் தனது சொத்து 3.4 கோடி ரூபாய். என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2015ல் அவரது சொத்து மதிப்பு 2.1 கோடியாக இருந்தது. தற்போது அவர் குறிப்பிட்டுள்ள தொகையை ஒப்பிடும்போது கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது சொத்து 1.3 கோடி மட்டுமே உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் தன்னார்வ ஓய்வூதிய சலுகைகளாக 2015ல் ரூ.15 லட்சம் இருந்தது. தற்போது 2020ல் ரூ.57 லட்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது ரொக்கம் மற்றும் நிலையான வைப்புத்தொகை ரூ.32 லட்சம் மட்டுமே அதிகரித்துள்ளது.

கேஜ்ரிவால் மனைவியின் அசையா சொத்துகளின் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லை, அதே நேரத்தில் கேஜ்ரிவாலின் அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ.92 லட்சத்திலிருந்து ரூ.177 லட்சமாக அதிகரித்தது.

‘‘கேஜ்ரிவாலின் அசையா சொத்துக்களின் மதிப்பு அதிகரித்துள்ளதாக காட்டப்பட்டுள்ள சொத்து மதிப்புகூட மாறியுள்ள மதிப்பீடுகளின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகும்.

2015 ஆம் ஆண்டைப் போலவே அதே சொத்தின் மதிப்பீட்டை அதிகரித்துள்ளதன் காரணமாகவே தற்போது அதிகரித்துள்ளது'' என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in