Published : 21 Jan 2020 11:43 AM
Last Updated : 21 Jan 2020 11:43 AM

மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குத் தயார்; என்பிஆர். ஏற்றுக் கொள்ள முடியாதது: கேரள முதல்வர் பினராயி விஜயன் 

2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குத் தயார் ஆனால் தேசிய மக்கள் தொகை பதிவேடு என்கிற என்.பி.ஆர் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய அரசிடம் தெரிவிக்க முடிவெடுத்திருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் என்பிஆர் என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு என்கிற என்.ஆர்.சி.க்கு வழிவகுக்கும் என்பதில் மக்கள் கவலைப்படுகின்றனர் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய என்.ஆர்.சி. என்பது என்பிஆர் என்பதின் நீட்சியே என்று கூறிய கேரள அரசு, எனவே என்.ஆர்.சி.யின் பின்னணியில் என்பிஆர்-ஐ அமல்படுத்துவது கேரள மக்களிடையே கடும் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தும் இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கேரள அமைச்சரவை உணர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் அச்சத்தைக் களைந்து அமைதியை நிலைநாட்ட மாநில அரசு அரசியல் சாசன ரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ளது. எனவே என்பிஆர் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க முடியாது என்று மத்திய அரசுக்கு தெரிவிக்க கேரள அரசு கடமைப்பட்டுள்ளது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. என்பிஆர், என்.ஆர்.சி இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்களே என்று கேரள அரசு தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x