Published : 20 Jan 2020 08:38 AM
Last Updated : 20 Jan 2020 08:38 AM

வேலையின்மைதான் உண்மையான பிரச்சினை: அசாதுதீன் ஒவைசி கருத்து

நாட்டின் உண்மையான பிரச்சினை மக்கள்தொகை அல்ல, வேலைவாய்ப்பின்மைதான் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஹைதராபாத் மக்களவை தொகுதி எம்பியுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அண்மையில் பேசியபோது, 2 குழந்தைகள் திட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக தெலங்கானாவின் நிஜாமாபாத் நகரில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் அசாதுதீன் ஒவைசி பேசியதாவது:

எனக்கு 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளனர். பல்வேறு பாஜக தலைவர்களும் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுள்ளனர். முஸ்லிம்களின் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாட்டின் உண்மையான பிரச்சினை மக்கள் தொகை அல்ல. வேலைவாய்ப்பின்மைதான்.

கடந்த 2018-ம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை காரணமாக நாள்தோறும் 36 இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியாது. அதனால்தான் 2 குழந்தைகள் திட்டத்தை ஆர்எஸ்எஸ் முன்னிறுத்துகிறது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் பிரிவினைவாதம் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x