தேர்வு குறித்த விவாதம்: மாணவர்கள், ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடல்

தேர்வு குறித்த விவாதம்: மாணவர்கள், ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடல்
Updated on
1 min read

தேர்வு குறித்த விவாதம் 2020”-ல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை கலந்துரையாட உள்ளார்.

பரிக்ஷா பே சர்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடன் கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு குறித்த கலந்துரையாடி வருகிறார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடும் தேர்வு குறித்த விவாதத்தின் முதலாவது நிகழ்ச்சி கடந்த 2018 பிப்ரவரி 16 அன்று டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடும் தேர்வு குறித்த விவாதத்தின் இரண்டாவது நிகழ்ச்சி 2019 ஜனவரி 29 அன்று அதே இடத்தில் நடைபெற்றது.

தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 3-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.இதற்காக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்தநிலையில் 3-வது ஆண்டாக தேர்வு குறித்த விவாதம் 2020 நாளை (ஜனவரி 20-ம் தேதி) காலை 11 மணிக்கு டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் நடைபெற உள்ளது. தேர்வு குறித்த மனஅழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி, தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் கேள்விகளுக்குப் பிரதமர் மோடி பதிலளிப்பதோடு அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

இந்த தனித்துவமான நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்பது மட்டுமின்றி பிரதமரிடமிருந்து சிறந்த ஆலோசனைகளைப் பெற வேண்டுமென்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பிரதமர் அலுவலம் அழைப்பு விடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in