Published : 19 Jan 2020 06:53 AM
Last Updated : 19 Jan 2020 06:53 AM

ஷிர்டி சாய்பாபா பிறந்த ஊர் எது? - உத்தவ் தாக்கரே அறிவிப்பை அடுத்து எழுந்தது சர்ச்சை - பாஜக விளாசல்

சாய்பாபா பிறந்த ஊர் பத்ரி என்றும் இங்கு சுற்றுலாப்பயணிகளையும் சாய்பாபா பக்தர்களையும் வரவழைக்க ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என்றும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதையடுத்து ஷிர்டி சாய்பாபா பிறப்பிடம் பற்றிய சர்ச்சைகள் மூண்டுள்ளது.

இதனையடுத்து சாய்பாபா பக்தர்களில் ஒரு பிரிவினர் காலவரையறையற்ற பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்

ஆனால் ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தன் அறக்கட்டளை ஷிர்டியில் வழக்கம் போல் சாய்பாபா கோயிலில் அனைத்து பூசை உள்ளிட்ட வழிபாடுகள் நடக்கும் பாபா பக்தர்கள் வழக்கம் போல் வரலாம் கும்பிடலாம் என்று அறிவித்துள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் பர்பானியில் உள்ள பத்ரி என்ற ஊர்தான் உண்மையில் சாய்பாபா பிறந்த இடம் என்று உத்தவ் தாக்கரே கூறியதுதான் இந்தக் குழப்பத்துக்குக் காரணமானது.

இந்நிலையில் பக்தர்கள் சிலர் பந் அறிவிக்க ஷிர்டி சாய்பாபா அறக்கட்டளை தன் அறிவிப்பில், "உள்ளூர் மக்கள் பந்த் அறிவித்தாலும் கோயில் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்தேயிருக்கும். தங்குமிடம் உள்ளிட்ட பிற வசதிகளிலும் மாற்றம் எதுவும் இல்லை" என்று அறிவித்துள்ளது.

உத்தவ் தாக்கரேயின் சாய்பாபா பிறந்த ஊர் குறித்த அறிவிப்பை அடுத்து பாஜக, சிவசேனா மீதும் மகாராஷ்ட்ராவின் மகா விகாஸ் அகாதி கூட்டணி மீதும் கடும் விமர்சனங்களை முன் வைத்தது, அதில் முதல்வர் தன் கருத்தை முதலில் வாபஸ் பெற வேண்டும் என்றும் சாய்பாபாவின் பிறப்பிடம் பத்ரி என்பது வரலாற்று ரீதியாக ஆதாரமற்றது. இதற்கு முன்னரும் ஷிர்டி சாய்பாபாவின் பிறப்பிடம் குறித்து கருத்துகள் எழுந்துள்ளன. ஆனால் இப்போது ஏன் அதைப் பேசி லட்சக்கணக்கான பக்தர்களின் மனதை புண்படுத்த வேன்டும் என்று சிவசேனாவை விமர்சனம் செய்துள்ளது.

பாஜக எம்.பி. சுஜய், கோர்ட் வரை சென்று சிவ சேனாவின் கருத்தை முறியடிப்போம் என்று கூறியுள்ளார். "சாய்பாபாவின் பிறந்த ஊர் பற்றிய சர்ச்சைகளை மீண்டும் மீண்டும் கிளப்பி உலகம் முழுதும் உள்ள லட்சக்கணக்கான சாய்பாபா பக்தர்களை ஏன் புண்படுத்த வேண்டும். சாய்பாபா பிறந்த ஊர் பத்ரி என்பதற்கான வரலாற்று ரீதியான ஆவணபூர்வ சான்று எதுவும் இல்லை. சாய்பாபாவே தன்னுடைய பிறப்பிடம் பற்றி எதுவும் பகிர்ந்ததில்லை. அவர் ஷிர்டியில் இருக்கும் போது தன் பிறப்பிடம் பற்றியோ தன் மதம் பற்றியோ எதையும் குறிப்பிடவில்லை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x