டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Updated on
1 min read

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி: பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல் பட்டியலில் 54 பெயர்கள் இடம் பெற்றுள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ணா திரித் படேல் நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆம் ஆத்மியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அல்கா லம்பா சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் அமைச்சர் அரவிந்த் லவ்லி காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். சங்கம் விஹார் தொகுதியில் முன்னாள் கிரிகிகெட் வீரர் கீர்த்தி ஆசாத்தின் மனைவி பூனம் ஆசாத் போட்டியிடுகிறார். ஆம் ஆத்மியை சேர்ந்த மணிஷ் சிசோடியாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் லட்சுமண் ராவத் போட்டியிடுகிறார். எனினும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in