

நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் உறுதியுடன் செயல்பட்டு நீதித்துறையின் சுதந்திரத்தை போற்றி பாதுகாக்க வேண்டியது அவசியம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 69-வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தத்து இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசும்போது, " நீதித்துறையின் சுதந்திரன் என்பது தேசத்தின் சொத்து. அதை போற்றி பாதுகாக்கும் பொறுப்பை செயல்படுத்துவதில் நீதிபதிகள் அமர்வும் பார் கவுன்சிலும் இணைந்து செயல்பட வேண்டும்" என்றார்.