

இமாச்சலப் பிரதேசத்தில் வரலாற் றுச் சிறப்புமிக்க மணிகரன் சாஹிப் குருத்வாரா அருகே நேற்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியாயினர்.
மலைப் பகுதியில் மணிகரன் சாஹிப் குருத்வாராவை ஒட்டியிருந்த மூன்று மாடிக் கட்டிடத்தில் ஏராளமானவர்கள் தங்கியிருந்தனர். திடீரென பெரும் பாறை சரிந்து விழுந்தது. இதில், அந்த மூன்று மாடிக் கட்டிடம் சேதமடைந்தது.
ஏராளமானவர்கள் பாறைகளின் அடியிலும், இடிபாடுகளிலும் சிக்கினர். இதில் 10 பேர் உயிரிழந் தனர். இன்னும் ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை.
குல்லு காவல்துறை துணை ஆணையர் ராகேஷ் கன்வார், 8 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். 10-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தி ருக்கக் கூடும் என, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித் துள்ளார்.
மாவட்ட நிர்வாகமும், குருத் வாரா நிர்வாகக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள் ளனர். அக்கட்டிடத்தில் தங்கியி ருந்தவர்கள் பெரும்பாலும் வெளியூர்க்காரர்கள் என்பதால், இறந்தவர்களை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கட்டிடத்தின் பெரும்பகுதி சேத மடைந்துள்ளது. காயமடைந் தவர்கள், குல்லு மண்டல மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். இவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தலைவர் சஞ்சய் குமார் கூறும்போது, “ காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலையிலிருந்து சரிந்த பெரும்பாறை உருண்டு வந்து குருத்வாராவின் பின்பக்கத்தை நொறுக்கிவிட்டது” என்றார்.
காவல் துறை துணை ஆணையர் ராகேஷ் கன்வார் கூறும்போது, “அக்கட்டிடம் விரைவில் காலி செய்யப்படும். வரும் நாட்களில் யாரையும் தங்க அனுமதிக்க மாட்டோம். கட்டிடத்தின் உறுதித் தன்மையைப் பொறுத்து வேறு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும். அது இடிக்கப்படலாம். இந்த கட்டிடம் முற்றிலும் ஆக்கிரமித்தே கட்டப் பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அல்லது சட்டப்பூர்வமான கட்டமைப்பு அல்ல. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே வனத்துறையினருக்கு இதுதொடர்பாக நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இது விதிமுறை மீறல்தான்” எனத் தெரிவித்தார்.
மேலும் பாறைகள் விழலாம் என்பதால், அப்பகுதியில் நுழைவதைத் தடுக்க வேலி அமைக்கப்பட்டுள்ளது.