குடியுரிமைச் சட்டம் பற்றி 10 வரிகள் பேச முடியுமா? - ராகுல் காந்திக்கு ஜே.பி.நட்டா சவால்

குடியுரிமைச் சட்டம் பற்றி 10 வரிகள் பேச முடியுமா? - ராகுல் காந்திக்கு ஜே.பி.நட்டா சவால்
Updated on
1 min read

குடியுரிமைச் சட்டம் பற்றி 10 வரிகளை ராகுல் காந்தியால் பேச முடியாது, அவருக்கு நான் சவால் விடுக்கிறேன் என பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சட்டத்துக்கு கேரளா, மேற்குவங்கம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
குறிப்பாக காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாவது:

‘‘குடியுரிமைச் சட்டம் பற்றி தெரியாமலேயே பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ராகுல் காந்தியும் குடியுரிமைச் சட்டம் பற்றி எந்த விவரமும் தெரியாமல் பேசுகிறார். அந்த சட்டம் பற்றி 10 வரிகளை அவரால் கூற முடியுமா. அவருக்கு நான் சவால் விடுக்கிறேன். எதையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் பேசுவது தவறானது’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in