டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டள்ளது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி: பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டள்ளது. இந்த முதல்பட்டியலில் 70 தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.

இதில் பாஜக மூத்த தலைவர்களான விஜேந்தர் குப்தா, முன்னாள் மேயர்கள் ரவீந்தர் குப்தா, யோகேந்தர் குப்தா ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது. இதுபோலவே இந்த பட்டியலில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 11 பேரும், 4 பெண்களும் பாஜக வேட்பாளர்களாக டெல்லி தேர்தலில் களமிறங்கவுள்ளனர். பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ கபில் மிஸ்ராவுக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in